நாம் பேசும்போதும் எழுதும்போதும்  வாக்கியங்களை உபயோகிக்கிறோம். அதாவது
the boy runs fast
அந்த பையன் வேகமாக ஓடுகின்றான்

பல வாக்கியங்கள் சேர்ந்து ஒரு முழுமையான பொருள் தரும் தொகுப்பு sentences(சொற்றொடர்) ஆகிறது.

ஆங்கிலத்தில் இந்த sentence 4 வகையாக பிரிக்கபடுகிறது.

1 . assertive sentence(செய்தி வாக்கியங்கள்)
ஒரு உறுதியான செய்தியை தரும் வாக்கியம்;
(எ.கா) India won the match by 3 wickets
இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

2 கேள்வி வாக்கியம்(Interrogative sentence).
கேள்வி குறியில் முடியும்  வாக்கியங்கள்
will dhoni make a century?
டோனி சதம் அடிப்பாரா?

 3 கட்டளை மற்றும் வேண்டுகோள் வாக்கியங்கள்(Imperative sentence)
please be seated
தயவு செய்து அமருங்கள்

sit down there
அங்கே உட்கார்
4 உணர்ச்சி வாக்கியம் (Exclamatory sentence)
how disgusting!
எவ்வளவு அருவருப்பான செயல்!


மேலே உள்ளதை கவனிக்கும்போது நாம் பேசும் வார்த்தைகள் மேற்சொன்ன 4 வாக்கியங்களில் அமைந்து விடுகிறது. அதாவது, நாம் ஒரு செய்தியை சொல்கிறோம் அல்லது கேள்வி கேட்கிறோம், இல்லையென்றால் அதிகாரம் செய்கிறோம்  அல்லது உணர்ச்சிவசப்படுகிறோம்.

note: நடிகர் வடிவேலுவின் (நாங்கல்லாம்....)சவடால் மொழி இதில் அடங்காது

Post a Comment