Showing posts with label english. Show all posts
Showing posts with label english. Show all posts
sub chapter 4: usage of do, does
Sunday, January 17, 2010 by educations in Labels: , , , , , , , ,

இந்த பதிவில் do, does  ஆகியவைகளின் உபயோகங்களை காண்போம்.
எந்த மொழியின் இலக்கணத்திலும் first person, second person, third person என்ற பிரிவு உள்ளதை காணலாம். சரி இந்த first, second இவைகளெல்லாம் என்ன?

நானும் குமாரும் பேசிகொண்டிருக்கிறோம்.அப்போது அவனுடைய தங்கை ஒரு நாய்க்குட்டியோடு அங்கு வருகிறாள். அப்பா அவனை அழைப்பதாக சொல்கிறாள்.பின் குமார் 
அவனுடைய தங்கையோடு வீட்டிற்கு செல்கிறான்.
 இப்போது இந்த சம்பவத்தை என்னுடைய பார்வையில் சொல்கிறேன்.
நான்                                     =         நான் 
குமார்                                  =        அவன்
நானும் குமாரும்             =        நாங்கள், நாம்
 குமாரின் தங்கை             =     அவள்
நாய்க்குட்டி                         = அது
குமாரும் தங்கையும்      =  அவர்கள்

நான் என்பது                                            first person sigular
நாம் என்பது                                           first person plural
நீ       என்பது                                            second person singular
நீங்கள் என்பது                                      second person plural
அவன்&  அவள் &அது என்பது           third person singular
அவர்கள் என்பது                                  third person plural
     ஒரு மொழியை பேசுவதற்கு நாம் அந்த மொழியில் கேள்வி கேட்க வேண்டும்.
உரையாடல் என்பது கேள்வியும் அதற்கு பதிலும் கொண்டதே. நாம் இப்போது do,does
ஆகிய auxilliary யை கொண்டு கேள்வியமைப்பதை காண்போம்.
auxilliary என்றால் என்ன?
துணை வினை சொல் ஆகும்.  அதாவது இந்த வகை சொற்கள் ஆங்கிலவாக்கியங்களில் துணையாக பயன்படுகிறது.மேலும் சில சொற்களை வரும் பதிவில் காண்போம்.
காலங்கள் பொதுவாக மூன்று பிரிவுகளாகவும்(இறந்த,நிகழ்,எதிர்காலங்கள்)
உட்பிரிவில் பனிரெண்டாகவும் வகைப்படுத்தபடுகிறது.அதை பிறகு விரிவாக காண்போம்.
சாதாரண நிகழ்காலத்தில் கேள்விவாக்கியங்களையும், எதிர்மறை வாக்கியங்களையும்  அமைக்க do , does  பயன்படுகிறது.
1. I walk.
நான் நடக்கிறேன்
do I walk?
நான் நடக்கிறேனா?
I do not walk.                                  
2. You walk.                        
நீ நடக்கிறாய்.

DO you walk?
நீ நடக்கிறாயா?

You do not walk.
நீ நடக்கிறாயா?
you do not walk.

நீ நடப்பதில்லை

3. They walk.
அவர்கள் நடக்கிறார்கள்
Do they walk?
அவர்கள் நடக்கிறார்களா?
They do not walk.
அவர்கள் நடப்பதில்லை .
4.we walk.
நாம் நடக்கிறோம்.
do we walk?
நாம் நடக்கிறோமா?
we do not walk.
நாம் நடப்பதில்லை.
5.They walk.
அவர்கள் நடக்கிறார்கள்.

Do they walk?
அவர்கள் நடக்கிறார்களா?

they do not walk.
அவர்கள் நடப்பதில்லை


----------------------------------------------
6.He walks.
 அவன் நடக்கிறான்.
Does he walk?
அவன் நடக்கிறானா?

He does not walk.
அவன் நடக்கவில்லை.

7.She walks.
அவள் நடக்கிறாள்

Does she walk?
அவள் நடக்கிறாளா?

She does not walk.
அவள் நடக்கவில்லை.

8. It walks.
அது நடக்கிறது.

Does it walk?
அது நடக்கிறதா?

It does not walk.
அது நடக்கவில்லை.


மேற்கண்ட வாக்கியங்களை படிக்கும்போது இயல்பாக ஒரு சந்தேகம் வரக்கூடும்.
அதாவது I,you, you,we,they க்கு do வந்தது. He,she, it க்கு மாறுபடுகிறது. அதுதான் ஆங்கிலம்.இலக்கண விதிப்படி He,she,it க்கு செய்தி வாக்கியத்தில் s  சேர்க்க வேண்டும். கேள்வி மற்றும் எதிர்மறை வாக்கியத்தில் does  சேர்க்கப்படுகிறது.

குறிப்பு:  அதாவது, கிறான்,கிறாள்,கிறது என்று முடியும் வார்த்தைகளுக்கு வினையோடு s சேர்க்க வேண்டும்.  do+ s=  does.
படியுங்கள், உங்கள் கருத்தை சொல்லுங்கள்.தவறு இருந்தால் தெரியப்படுத்தவும்.நன்றி.

நீங்கள் ஆங்கிலத்தில் எவ்வளவு புலமை(diplomacy ) பெற்றிருந்தாலும் ஒரு புது வார்த்தையை நீங்கள் காணும் பொழுது உங்களால் அந்த வார்த்தையின் சரியான உச்சரிப்பை சொல்லிவிட முடியாது. வேண்டுமென்றால் முன் தெரிந்த வார்த்தைகளின் அமைப்பை யூகித்து சொல்லலாம். உதாரணமாக put என்பதை புட் என்கிறோம்.ஆனால் putt என்பதை பட் என்று உச்சரிக்க வேண்டும்.ஆகையால், அதிக வார்த்தைகளை நீங்கள் உச்சரித்து/எழுதி பழக வேண்டும்.
மேலும் நாம் இன்றைய சூழ்நிலையை பார்க்கும்போது ஆங்கிலம் மிகவும் உயர்ந்த
 மொழி எனவும் ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் மெத்த படித்த யோக்கியர்கள்
 மற்றும் நாகரீகத்தில் முன்னேறியவர்கள் எனவும் ஒரு மாய பிம்பம் உள்ளதை
 மறுக்கவியலாது.சரி நிஜமாக அரசு பள்ளிக்கூடங்களிலும், தமிழ் வழி கற்றல் முறையில்
படித்தவர்களும்  ஆங்கிலம் சரளமாக அதுவும் வெள்ளைக்கார துரைமார்கள் போல
 பேச முடியாதா?
ஆங்கில வழியில் படித்தவர்கள் அனைவரும் சரளமாக, சரியாக ,உச்சரிப்பு
 பிழைகளின்றி பேசுகிறார்களா?
நம் இந்திய மக்கள் பேசும் ஆங்கிலம் ஏன் ஏனைய இந்திய மொழிகள் போல
 உள்ளது?
நம்மால் ஏன் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் போல்
 பேசவோ, அல்லது அவர்களின் பேச்சு நமக்கோ புரிய
 சிரமமாக உள்ளது?
நம்முடைய இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி பல நிறுவனங்கள் நம்மிடம்
பணம் வாங்கி கொண்டு 30 நாள்களில்,60 நாள்களில் ஆங்கிலம் கற்று தருவதாக
 சொல்கிறார்களே, இது உண்மையா?
அல்ல. முதலில் ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அது உலகம் முழுமைக்கும் பேசப்படுகிறது.ஆங்கிலம்
 கற்றுக்கொண்டால் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. ஆகையால், நாம்
 அதை கற்றுக்கொள்வோம். அதற்கு முன் சில விஷயங்களை தெரிந்து
 கொள்வது நல்லது.

  • ஆங்கிலம் கற்பது மலையை இழுப்பது போன்ற விஷயம் அல்ல.
  • எந்த மொழியையும் பழக்கினால் சுலபமாக பேசக்கூடியதே.ஆங்கிலமும் விதிவிலக்கல்ல.
  • அதற்காக 30 நாள்களிலோ, 60 நாள்களிலோ கற்றுகொண்டுவிடக்கூடிய
    விஷயமுமில்லை

  • சாதாரணமாக உங்கள் பயிற்சியை பொறுத்து மூன்று மாதமோ
    அல்லது அதற்கு மேற்பட்ட காலமோ ஆகலாம்.

  • இந்த வலைப்பூவில் உச்சரிப்பிற்கு கவனம் கொடுத்திருக்கிறேன்.ஏனெனில் ஆங்கிலம் உச்சரிப்பு சார்ந்த மொழி.
உயிரெழுத்தின் உச்சரிப்பு முறைகள்
------------------------------------------------------------
ஆங்கிலத்தில் உயிரெழுத்துகள் a,e,i,o,u என ஐந்து எழுதுக்களாகிறது.
இந்த ஐந்து எழுத்துக்களின் உச்சரிப்பு பல வகைப்படுகிறது.
  • monophthongs -என்பது ஒருயிர்சந்திகள்  எனப்படுகிறது.
    இந்த ஒருயிர்சந்திகளில் short vowels மற்றும் long vowels என இரு பிரிவுகள் உள்ளது.
    short vowels என்பது குறுகி ஒலிக்ககூடியது.
    உதாரணமாக
    அ என்ற குறுகி ஒலிக்கும் வார்த்தைகள்
    cut-கட்    but -பட்     tough-டப்
    இ என்று ஒலிக்கும் வார்த்தைகள்
    wicket*-விக்கிட் *(இதை விக்கெட் என்று சொல்வது தவறாகும்)
    coffee- காபி
    money-மணி
    marriage -மரிட்ஜ் (இதை மேரேஜ என்பது தவறாகும்)
    biscuit-பிஸ்கிட்   (இதை பிஸ்கட்டு என்பது தவறாகும்)

    உ என்று ஒலிக்கும் வார்த்தைகள்
    wolf- வுல்ப்
    woman-வுமன்
    should- ஷூட்
    எ என ஒலிக்கும் சொற்கள்
    any -எனி
    many-மெனி
    friend- பிரெண்ட்
    ஆ ,ஒ என ஒலிக்கும் சொற்கள்
    கவனிக்க: இந்த உச்சரிப்பு முறை தமிழில் இல்லை. அதாவது ஆ வில் பாதி எடுத்து
    ஒ வில் முடிக்க வேண்டும்.
    குழப்பமாக இருக்கிறதா? அதாவது what என்பதுடைய உச்சரிப்பு waot அதாவது வஆஒட்   என்று உச்சரிக்க வேண்டும்.
    was-வஆஒஸ்
    pot -பஆஒட்
    இந்த வார்த்தைகள் தமிழில் நான்கு எழுத்துக்கள் இருந்தாலும் உச்சரிக்கும்போது
    இரண்டு எழுத்துகளாக உச்சரிக்க வேண்டும்.

    குறிப்பு; short vowels என்பது குறில் எனப்படுகிறது.
    மேலே நிறம் கொடுக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உச்சரிப்பு குறில் ஆகும்.
    Long vowels- என்பது நீண்டு ஒலிக்க கூடியது.நெடில் என அழைக்கப்படுகிறது.
    ஆ ,ஈ,ஊ, ஏ,ஓ
    ஆ வின் உச்சரிக்கும் முறை
    ask- ஆஸ்க்
    flask-பிளாஸ்க்
    ஈ யின் உச்சரிக்கும் முறை
    theme-தீம்
    receive-ரிசீவ்
    ஊ உச்சரிப்பு முறை
    moon -மூன்
    room-ரூம்
    ஏ யின் உச்சரிப்பு முறை
    early-ஏலி (இதில் R உச்சரிப்பு குறைவு அல்லது இல்லை)
    learn-லேஅர்ன்
    ஓ வின் உச்சரிப்பு
    all-ஒல் (இதை ஆல் என்பது தவறு)
    doorway-டோர்வே
    மேற்சொன்னவைகளை பார்க்கும் போது  எழுத்துக்களின் வடிவங்களும் , உச்சரிப்புகளும் வெவ்வேறாக உள்ளது.
    மெய்யெழுத்துக்களின்  உச்சரிப்பு முறைகளை வரும் பாடங்களில் காண்போம்.

chapter 5.Noun(number)
Friday, December 25, 2009 by educations in Labels: , , , , , ,

இப்போ நாம் பார்க்கவிருப்பது Noun(number).
--------------------------------------------------------------------
ஒருமை(singular)
பன்மை (plural)

ஒரு நபரை அல்லது ஒரு பொருளை குறிப்பது ஒருமை
ஒன்றுக்கு மேற்பட்டவை பன்மை.
tree-trees
cow-cows
ball-balls
இடப்பக்கம் இருப்பது ஒருமை.
வலப்பக்கம் உள்ளது பன்மை.
ஆங்கிலத்தில் எவ்வாறு ஒருமை பன்மையாகிறது?

இதற்கு பல வழிகள் உள்ளளன.

1 .பொதுவாக ஒரு s சேர்க்கபடுகிறது

pencil -pencils

2 es சேர்த்தும் பன்மையாக்கபடுகிறது

அதற்கு ஒருமையின் முடிவு (s,sh,ch,x) ஆக இருக்கும்

-s-       class-classes
-sh-     brush-brushes
-ch-    branch-branches
-x-      tax-taxes
-----------------------------------------------------------------------------------------------------------------------------
3.  பெரும்பான்மையான o வில் முடியும் ஒருமை பெயர்களும் es சேர்த்து பன்மையாகிறது
potato -potatoes        cargo-cargoes
-----------------------------------------------------------------------------------------------------------------------------
4.சில o வில் முடியும் பெயர்ச்சொல் வெறும் -s - மட்டும் சேர்க்கபடுகிறது
radio-radios        piano-pianos     photo-photos
-----------------------------------------------------------------------------------------------------------------------------
(ஆங்கில எழுத்தில் a,i,o,e,u, உயிரெழுத்து(vowel).
மற்றவை மெய்யெழுத்து (consonants) என அறிவீர்கள்.
 
5. ஒரு மெய்யெழுத்துக்கு பின் -y-இல் முடியும் ஒருமை பெயர்ச்சொல்லை பன்மையாக்க y-ஐ -i- ஆக மாற்றி அதற்கு பின் es சேர்க்கப்படுகிறது.
Baby-badies,             lady-ladies,     city-cities.

6.f-fe-     இல் முடியும் ஒருமை சொல் பன்மையாகுவதற்கு v ஆக மாற்றப்பட்டு es சேர்க்கப்படுகிறது

 life-lives           thief-theves  

note-இதில் சில விதி விலக்கும் உள்ளன.

chief-chiefs   roof-roofs

7.சில ஒருமையை பன்மையாகுவதற்க்கு உள்ளே ஒரு மெய்யெழுத்து(vowels ) மாற்றப்படுகிறது.
man-men      woman-women  mouse-mice, tooth-teeth

8.en-மூலமும் பன்மையாகிறது.
ox-oxen,         child-children

கவனிக்க ; இந்த ஒருமை/பன்மை மற்றும் இதர இலக்கண பாடங்கள் அனைத்தும் ஓரளவு தெரிந்துகொள்வதற்கு மட்டும் எழுதுகிறேன்.
ஆங்கிலம் பேசுவதற்கு இலக்கணம் ஓரளவிற்கே உபயோகப்படும். பேச்சு வழக்கு முறை,
உச்சரிப்பு முறை பற்றிய பாடங்கள் இலக்கணங்களில் இருந்து சிறிது மாறுபடுகிறது.
அவைகளை வரும் பதிவுகளில் காண்போம். உச்சரிப்பு பற்றிய பாடங்கள் மிகவும் அரிதாக கிடைக்கிறது.எனவே நான் இந்த வலைப்பூவில் உச்சரிப்பு பகுதியை தொட்டிருக்கிறேன். படியுங்கள், பயன்பெறுங்கள் . நன்றாக இருந்தால் நண்பர்களுக்கு
சொல்லுங்கள். எனக்கும் ஆலோசனை தெரிவியுங்கள். நன்றி.



                

வாக்கியங்கள் எட்டு வகை என பார்த்தோம்.
அந்த எட்டு வகையிலும் பல உள்பிரிவுகள் உள்ளன.
முதலில் பெயர் சொல்லை எடுத்து கொள்வோம்.
அதில் கிட்டத்தட்ட 3 வகைகளாக பிரிக்கபடுகிறது.
அவை:
noun
1.Gender
2.case
3. number
முதலில் பாலினத்தை Gender ஆய்வு செய்வோம் ;  
boy-girl           lion-lioness       hero-heroine     cock sparrow-hen sparrow.
மேற்கண்ட பெயர்களில் இடப்பக்கம் உள்ளவை ஆண் பால்(musculine gender)
வலப்பக்கம் உள்ளவை பெண் பால் (feminine gender)
  ------------------------------------------------------------------------------
இவையல்லாது வேறு பல இனங்களும் உள்ளன.
1.common gender
(E.X) parent,child,enemy
பொது பெயர்
பெற்றோர், குழந்தை
-----------------------------------------------------
2.nuetor gender
(E.X)pen,book
௨.அக்றிணை
புத்தகம், பேனா

நாம் பேசும்போதும் எழுதும்போதும்  வாக்கியங்களை உபயோகிக்கிறோம். அதாவது
the boy runs fast
அந்த பையன் வேகமாக ஓடுகின்றான்

பல வாக்கியங்கள் சேர்ந்து ஒரு முழுமையான பொருள் தரும் தொகுப்பு sentences(சொற்றொடர்) ஆகிறது.

ஆங்கிலத்தில் இந்த sentence 4 வகையாக பிரிக்கபடுகிறது.

1 . assertive sentence(செய்தி வாக்கியங்கள்)
ஒரு உறுதியான செய்தியை தரும் வாக்கியம்;
(எ.கா) India won the match by 3 wickets
இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

2 கேள்வி வாக்கியம்(Interrogative sentence).
கேள்வி குறியில் முடியும்  வாக்கியங்கள்
will dhoni make a century?
டோனி சதம் அடிப்பாரா?

 3 கட்டளை மற்றும் வேண்டுகோள் வாக்கியங்கள்(Imperative sentence)
please be seated
தயவு செய்து அமருங்கள்

sit down there
அங்கே உட்கார்
4 உணர்ச்சி வாக்கியம் (Exclamatory sentence)
how disgusting!
எவ்வளவு அருவருப்பான செயல்!


மேலே உள்ளதை கவனிக்கும்போது நாம் பேசும் வார்த்தைகள் மேற்சொன்ன 4 வாக்கியங்களில் அமைந்து விடுகிறது. அதாவது, நாம் ஒரு செய்தியை சொல்கிறோம் அல்லது கேள்வி கேட்கிறோம், இல்லையென்றால் அதிகாரம் செய்கிறோம்  அல்லது உணர்ச்சிவசப்படுகிறோம்.

note: நடிகர் வடிவேலுவின் (நாங்கல்லாம்....)சவடால் மொழி இதில் அடங்காது