நீங்கள் ஆங்கிலத்தில் எவ்வளவு புலமை(diplomacy ) பெற்றிருந்தாலும் ஒரு புது வார்த்தையை நீங்கள் காணும் பொழுது உங்களால் அந்த வார்த்தையின் சரியான உச்சரிப்பை சொல்லிவிட முடியாது. வேண்டுமென்றால் முன் தெரிந்த வார்த்தைகளின் அமைப்பை யூகித்து சொல்லலாம். உதாரணமாக put என்பதை புட் என்கிறோம்.ஆனால் putt என்பதை பட் என்று உச்சரிக்க வேண்டும்.ஆகையால், அதிக வார்த்தைகளை நீங்கள் உச்சரித்து/எழுதி பழக வேண்டும்.
மேலும் நாம் இன்றைய சூழ்நிலையை பார்க்கும்போது ஆங்கிலம் மிகவும் உயர்ந்த
 மொழி எனவும் ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் மெத்த படித்த யோக்கியர்கள்
 மற்றும் நாகரீகத்தில் முன்னேறியவர்கள் எனவும் ஒரு மாய பிம்பம் உள்ளதை
 மறுக்கவியலாது.சரி நிஜமாக அரசு பள்ளிக்கூடங்களிலும், தமிழ் வழி கற்றல் முறையில்
படித்தவர்களும்  ஆங்கிலம் சரளமாக அதுவும் வெள்ளைக்கார துரைமார்கள் போல
 பேச முடியாதா?
ஆங்கில வழியில் படித்தவர்கள் அனைவரும் சரளமாக, சரியாக ,உச்சரிப்பு
 பிழைகளின்றி பேசுகிறார்களா?
நம் இந்திய மக்கள் பேசும் ஆங்கிலம் ஏன் ஏனைய இந்திய மொழிகள் போல
 உள்ளது?
நம்மால் ஏன் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் போல்
 பேசவோ, அல்லது அவர்களின் பேச்சு நமக்கோ புரிய
 சிரமமாக உள்ளது?
நம்முடைய இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி பல நிறுவனங்கள் நம்மிடம்
பணம் வாங்கி கொண்டு 30 நாள்களில்,60 நாள்களில் ஆங்கிலம் கற்று தருவதாக
 சொல்கிறார்களே, இது உண்மையா?
அல்ல. முதலில் ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே. ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அது உலகம் முழுமைக்கும் பேசப்படுகிறது.ஆங்கிலம்
 கற்றுக்கொண்டால் வாய்ப்புகள் அதிகரிக்கின்றது. ஆகையால், நாம்
 அதை கற்றுக்கொள்வோம். அதற்கு முன் சில விஷயங்களை தெரிந்து
 கொள்வது நல்லது.

  • ஆங்கிலம் கற்பது மலையை இழுப்பது போன்ற விஷயம் அல்ல.
  • எந்த மொழியையும் பழக்கினால் சுலபமாக பேசக்கூடியதே.ஆங்கிலமும் விதிவிலக்கல்ல.
  • அதற்காக 30 நாள்களிலோ, 60 நாள்களிலோ கற்றுகொண்டுவிடக்கூடிய
    விஷயமுமில்லை

  • சாதாரணமாக உங்கள் பயிற்சியை பொறுத்து மூன்று மாதமோ
    அல்லது அதற்கு மேற்பட்ட காலமோ ஆகலாம்.

  • இந்த வலைப்பூவில் உச்சரிப்பிற்கு கவனம் கொடுத்திருக்கிறேன்.ஏனெனில் ஆங்கிலம் உச்சரிப்பு சார்ந்த மொழி.
உயிரெழுத்தின் உச்சரிப்பு முறைகள்
------------------------------------------------------------
ஆங்கிலத்தில் உயிரெழுத்துகள் a,e,i,o,u என ஐந்து எழுதுக்களாகிறது.
இந்த ஐந்து எழுத்துக்களின் உச்சரிப்பு பல வகைப்படுகிறது.
  • monophthongs -என்பது ஒருயிர்சந்திகள்  எனப்படுகிறது.
    இந்த ஒருயிர்சந்திகளில் short vowels மற்றும் long vowels என இரு பிரிவுகள் உள்ளது.
    short vowels என்பது குறுகி ஒலிக்ககூடியது.
    உதாரணமாக
    என்ற குறுகி ஒலிக்கும் வார்த்தைகள்
    cut-கட்    but -பட்     tough-டப்
    என்று ஒலிக்கும் வார்த்தைகள்
    wicket*-விக்கிட் *(இதை விக்கெட் என்று சொல்வது தவறாகும்)
    coffee- காபி
    money-மணி
    marriage -மரிட்ஜ் (இதை மேரேஜ என்பது தவறாகும்)
    biscuit-பிஸ்கிட்   (இதை பிஸ்கட்டு என்பது தவறாகும்)

    என்று ஒலிக்கும் வார்த்தைகள்
    wolf- வுல்ப்
    woman-வுமன்
    should- ஷூட்
    என ஒலிக்கும் சொற்கள்
    any -எனி
    many-மெனி
    friend- பிரெண்ட்
    ஆ ,ஒ என ஒலிக்கும் சொற்கள்
    கவனிக்க: இந்த உச்சரிப்பு முறை தமிழில் இல்லை. அதாவது ஆ வில் பாதி எடுத்து
    ஒ வில் முடிக்க வேண்டும்.
    குழப்பமாக இருக்கிறதா? அதாவது what என்பதுடைய உச்சரிப்பு waot அதாவது வஆஒட்   என்று உச்சரிக்க வேண்டும்.
    was-வஆஒஸ்
    pot -பஆஒட்
    இந்த வார்த்தைகள் தமிழில் நான்கு எழுத்துக்கள் இருந்தாலும் உச்சரிக்கும்போது
    இரண்டு எழுத்துகளாக உச்சரிக்க வேண்டும்.

    குறிப்பு; short vowels என்பது குறில் எனப்படுகிறது.
    மேலே நிறம் கொடுக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உச்சரிப்பு குறில் ஆகும்.
    Long vowels- என்பது நீண்டு ஒலிக்க கூடியது.நெடில் என அழைக்கப்படுகிறது.
    ஆ ,ஈ,ஊ, ஏ,ஓ
    வின் உச்சரிக்கும் முறை
    ask- ஆஸ்க்
    flask-பிளாஸ்க்
    யின் உச்சரிக்கும் முறை
    theme-தீம்
    receive-ரிசீவ்
    உச்சரிப்பு முறை
    moon -மூன்
    room-ரூம்
    யின் உச்சரிப்பு முறை
    early-ஏலி (இதில் R உச்சரிப்பு குறைவு அல்லது இல்லை)
    learn-லேஅர்ன்
    ஓ வின் உச்சரிப்பு
    all-ஒல் (இதை ஆல் என்பது தவறு)
    doorway-டோர்வே
    மேற்சொன்னவைகளை பார்க்கும் போது  எழுத்துக்களின் வடிவங்களும் , உச்சரிப்புகளும் வெவ்வேறாக உள்ளது.
    மெய்யெழுத்துக்களின்  உச்சரிப்பு முறைகளை வரும் பாடங்களில் காண்போம்.

Post a Comment