chapter 7. Kinds of adjectives;பெயருரிசொல்லின் வகைகள்
Wednesday, January 6, 2010 by educations in

  பெயருரிசொல் (adjective) நான்கு வகையாகும்.
1. Adjective of Quality;
ஒரு நபரின் அல்லது பொருளின் தன்மையை குறிக்கும் பண்பு சொல் ஆகும் .
chennai is a large city.
சென்னை ஒரு பெரிய நகரம்.
இந்த வாக்கியத்தில் 'பெரிய'  என்ற தன்மையை குறிக்கும் சொல்லாகும்.
மேலும்;  The man is an Honest man.
The  foolish old crow tried to sing.
இதில் honest, foolish போன்ற தன்மைகளை குறிக்கிறது.
2. Adjective of  Quantity:
 I ate some food
நான் சிறிது உணவருந்தினேன்.
2.He showed much patience.
அவன் மிகவும் பொறுமை காத்தான்.
3.He has little * intelligence.
அவனுக்கு அறிவே இல்லை. (* இவ்வாக்கியத்தில் லிட்டில் என்ற வார்த்தையின் அர்த்தம் வேறாகிறது. இதை பின் பார்ப்போம்)
4. We have had enough exercise.
நாங்கள் போதுமான பயிற்சிகளை பெற்றிருக்கிறோம்.
5. There has not been sufficient rain for this year.
 இந்த வருடம் போதுமான அளவு மழை பெய்யவில்லை.
6 .  Whole plan has changed.
முழு திட்டமும் மாறிவிட்டது.
மேற்கண்ட வாக்கியங்களில் வண்ணமிட்ட வார்த்தைகள் அளவை குறிக்கிறது.
சுருக்கமாக, adjective of quantity யை தெரிந்து கொள்ள How much (எவ்வளவு)? என கேள்விக்கு பதிலாக கொள்ளலாம்.

3 . Adjective of numbers (OR) Numeral adjectives:
There are no pictures in this book.
இந்த புத்தகத்தில் படங்கள் இல்லை.
I have taught many things.
நான் உனக்கு பல விஷயங்களை கற்று கொடுத்தேன்.
The hand has five fingers.
நம் கை ஐந்து விரல்களை கொண்டது.
All men must die.
அனைவரும் ஒரு நாள் இறப்பவர்களே.
மேற்கண்ட வாக்கியங்களில் உள்ள வண்ணமிட்ட வார்த்தைகளை பார்க்கும்போது
How many? என்ற கேள்விக்கு விடையமைவது புலனாகும்.
இந்த Adjective of  Number இல் மூன்று வகை உள்ளது.
a) .definite adjective of numbers.
 அதாவது ஒரு குறிப்பிட்ட, சரியான எண்ணிக்கையை தருவது.
I have five rupees.

இதில் ஐந்து என்பது சரியான எண்ணிக்கையாகிறது
குறிப்பு:  எத்தனையாவது  என்று ஆங்கிலத்தில் எவ்வாறு கேட்பது?
அதாவது, உங்கள் வீட்டிற்கு நீங்கள் எத்தனையாவது பிள்ளை?
மன்மோகன் சிங் அவர்கள் நம் நாட்டின் எத்தனையாவது பிரதமர்?
ஆங்கிலத்தில் இதற்கு நேரடியான பொருள் கொண்ட வார்த்தை இல்லை.
அதற்கு பதில் ordinal பயன்படுத்தபடுகிறது.
சரி ordinal ன்னா என்ன?.
first, second,third....              ordinal.
one,two, three........              Cordinal.
சரி இப்போ கேள்விக்கு விடை.
What is the birth ordinal do you in your family?
what is the ordinal of primeministership does Mr.Manmogan come?
b) Indefinite adjectives of number:
இந்த பெயருரிசொல்லானது உத்தேசமான எண்ணிக்கையை குறிக்கிறது.
அதற்கு பயன்படும் வார்த்தைகள்.
All,no,few,some,any,certain,sundry,several
c) Distributive numeral adjectives:
  
இந்த பகுதியானது பொதுவானதாக பயன்படுத்தபடுகிறது. உதாரணமாக,
 The Mangement expects every man to do his duty.
நிர்வாகம் ஒவ்வொரு ஊழியரும் தன் கடமையை செய்ய எதிர்பார்க்கிறது.
Every word of it is false.
அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் தவறானவை.
Either is true.
இரண்டுமே சரியானவை.
Neither is true.
இரண்டுமே சரியல்ல.
மேலுள்ள வாக்கியங்களில் பயன்படுத்தபடுபவைகளை Distributive adjectives என்கிறோம்.
குறிப்பு; ஒரே வார்த்தை எண்ணிக்கையாகவும்(number of adjective) ,அளவாகவும் (quantity of adjective)  உபயோகப்படுகிறது.
I ate some food  -                           நான் சிறிது உணவருந்தினேன்.(அளவு).
Some boys are playing-           சில பையன்கள் விளையாடுகிறார்கள்.(எண்ணிக்கை).
--
He has lost all his money     -  அவன் தன்னுடைய அனைத்து செல்வதையும் izhanthan(அளவு).
All men must die                -  மனிதர்கள் அனைவரும் இறப்பவர்களே.(எண்ணிக்கை).
---
I have no money   -                            என்னிடம் பணம் இல்லை.(அளவு).
There are no pictures in this book.-     இந்த புத்தகத்தில் படங்கள் இல்லை.(எண்ணிக்கை).
-
He did not eat any food       -               அவன் எந்த உணவும் சாப்பிடவில்லை.(அளவு).
are there any mangoes in the busket?  -    கூடையில் எதுவும் மாம்பழம் உள்ளனவா?.(எண்ணிக்கை)
--
I have enough food -         என்னிடம் போதுமான உணவு உள்ளது.(அளவு).
there are enough plates-     போதுமான தட்டுகள் உள்ளன.(எண்ணிக்கை).
மேற்கண்ட வாக்கியங்களை கவனியுங்கள். ஒரே வார்த்தைகள் பல அர்த்தங்கள்.
இதுதான் ஆங்கிலம்.

D,Interrogative adjectives:  இவ்வகையானது கேள்வி கேட்க உபயோகிக்கபடுகிறது.
Whose book is this  -                 இந்த புத்தகம்  யாருடையது? .
what manner of the man he is? - எந்த மாதிரியான நடதையுள்ளவன்?
which way should we go? --       நாம் எந்த வழியில் போக  வேண்டும் ?.    
மேலுள்ளவற்றிற்கு விளக்கம் தேவையில்லை என எண்ணுகிறேன்
.
கடைசியாக இன்னொரு வகையான பெயருரிசொல்லையும் பார்த்துவிடுவோம்.
அதை Demostrative adjectives என்று அழைக்கிறார்கள்.
இந்த வகை which? என்ற கேள்விக்கு பதிலாக அமைகிறது.
இதை கவனியுங்கள்.
This boy is stronger than me. - இந்த  பையன் என்னை விட மிக பலசாலியாக உள்ளான்.
that boy is short                   - அந்த பையன் குட்டையாக உள்ளான்.
These mangoes are sour        -  இந்த மாம்பழம் புளிப்பாக உள்ளது.
Those  guys are very aggressive- அந்த பையன்கள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார்கள்.
I hate such things     -    அது போன்ற விஷயங்களை நான் வெறுக்கிறேன்.

முடிவுரை:  நாம் இந்த பாடத்தில் adjective (பெயருரிசொல்) பற்றி பார்த்தோம். அதனையொட்டி சில வார்த்தைகளின் உபயோகங்களை இனி வரும் காலங்களில் காண்போம். படித்து கருத்தை சொல்லுங்கள்.

Post a Comment