chapter 8: Usage of Adjectives
Monday, January 11, 2010 by educations in

 இந்த பதிவில் ஒரே பெயருரிசொல்லின் (Little ,the little,a little) பல உபயோகங்களை எழுதுகிறேன்.படித்து கருத்து சொல்லவும்.
இதை கவனியுங்கள்:
              Little , the little, a little
மேலுள்ளவை பெயருரிசொல் ஆகும்.ஆனால் பொருள் வேறுபடுகிறது.Little என்பது எதிர்மறை வாக்கியங்களில் பயன்படுகிறது. உதாரணமாக,
 There is little hope of  his recovery.
அவர் தேறுவார் என்று சிறிதும் நம்பிக்கை இல்லை.
He showed little concern about the matter.
அவர் அந்த விஷயத்தில் சிறிதும் அக்கறை காட்டவில்லை.
இவ்வாக்கியங்களை பார்த்தால் வெறும் Little  என்று வரும் வார்த்தைக்கு பொருள்
"இல்லை" என ஆகிறது.
a little
இதற்கு சிறிது என்று அர்த்தமாகிறது.
there is a little hope of his recovery.
அவர் தேர்ச்சி பெறுவார் என்று நம்பிக்கை உள்ளது.(அல்லது) அவர் தேர்ச்சி பெறக்கூடும்.
A little knowledge is a dangerous thing.
அரைகுறை அறிவு ஆபத்து.
The little
      இதற்கும் சிறிது என்றுதான் அர்த்தம் ஆனால் சிறிது வித்தியாசப்படுகிறது.
  The little information he had was not quite reliable.
அவன் சொன்ன சிறிய தகவலும் நம்ப தகுந்ததாக இல்லை.
The little knowledge of carpendry that he possessed stood him in good stead.
அவனிடம் சிறிதளவே இருந்த தச்சுவேலை அறிவு அவனை நிலைநிறுத்தியது.
அதாவது The little  என்பதற்கு சிறிது என்றே அர்த்தப்பட்டாலும் அதை அழுத்தமாக சொல்வதற்கு பயன்படுகிறது.
இதே முறை few, a few, the few ஆகிய பெயருரிசொல்லுக்கும் பயன்படுகிறது.

Post a Comment