sub chapter;3 easy english
Monday, January 11, 2010 by educations in

ஆங்கிலம் என்பது மிகவும் இலகுவான மொழி. அதை கற்று  கொள்ள   சில வழிமுறைகள், சில பயிற்சிகள் செய்தால் போதுமானது. முதலில் ஒரு வார்த்தை சொற்களை படியுங்கள். பிறகு இரு வார்த்தைகள், மூன்று........
வார்த்தைகள் சேர்ந்து வாக்கியங்கள் ஆகின்றது.முதலில் சிறு சிறு வாக்கியங்களை பழகுங்கள். ஒரு வாக்கியத்திற்கும் இன்னொரு வாக்கியத்திற்கும் இணைப்பு சொற்கள் பல உள்ளன(preposition ,conjunction ). பல வாக்கியங்கள் சேர்ந்து paragraph ஆகிறது.நாம் சிறு குழந்தையாக இருந்தபோது நம் தாய்மொழியை எவ்வாறு கற்றோம் என நினைவில் கொண்டு வாருங்கள்.நாம் பேசுவது சரியா,தவறா என ஆராயவில்லை.பேசுவதற்கு பயப்படவுமில்லை.ஒவ்வொரு பொருளின் பெயரையும் மனப்பாடம் செய்யவுமில்லை. பேசினோம். சரியோ,தவறோ நிறைய பேசினோம். அவ்வாறு பேச பேச நம் மொழி நம் வசமாயிற்று.மொழி தவறும் நம்மை விட்டு தூரமாயின. முதன் முதலில் ஒரு மொழியை பேசும்போது கண்டிப்பாக தவறு ஏற்படும். கவலைப்படாமல் முயற்சி செய்து பயிற்சி எடுத்து கொண்டிருந்தால் ஆங்கிலத்தில் நமக்கு புலமை கிடைக்கும்.
ஆங்கிலத்தின் பயன்கள்:
ஆங்கிலம் உலகம் முழுவதும் தொடர்பு மொழியாக இருக்கிறது. அதை கற்பதால் நிறைய பயன் உள்ளது. மாணவர்களுக்கு, வேலை தேடுபவர்களுக்கு, வியாபாரம் செய்பவர்களுக்கு,இல்லத்தரசிகளுக்கு என அனைத்து தரப்பினருக்கும் அத்தியாவசியமாகிறது. ஆங்கிலம் உங்களுக்கு வர பெற்றால் இணையத்தின் வழியாக பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக எனக்கு கணினிமொழி (C,C++,JAVA,etc.....) கற்கவேண்டிஇருக்கிறது. அதற்கு இங்கு(சென்னை)
ஒரு மொழியை கற்க ஏறத்தாழ மூவாயிரம் ரூபாய் செலவாகிறது. அதே படிப்பை இணையத்தின் வாயிலாக article ஆகவோ pdf file ஆகவோ படித்து கொள்ளலாம்.
அதைவிட youtube ன் வாயிலாக சுலபமாக படித்து கொள்ளலாம் (certificate தான் யாரும் தர மாட்டார்கள்).எனவே நாம் ஆங்கிலத்தை படித்து கொள்வோம்.நன்றி.

Post a Comment