chapter 9. The article
Sunday, January 17, 2010 by educations in

இன்றைய பாடத்தில் a , an, the ஆகிய adjectives களின் உபயோகங்களை பார்ப்போம்.
இம்மூன்றும் ஆங்கிலத்தில் articles  எனப்படுகிறது. இதில் a , an, ஆகிய இரண்டும் indefinite  articles ஆகும். the  என்பது definite article ஆகும். சரி, இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?. எந்தெந்த இடங்களில் பயன்படுகிறது.
சற்று இதை கவனியுங்கள்.  I need a doctor,            I met the doctor,
மேலுள்ளவற்றில் முதல் வாக்கியத்தில் 'எனக்கு ஒரு மருத்துவர் தேவைப்படுகிறார்.'
என்று பொதுவாக குறிக்கிறது. இரண்டாம் வாக்கியத்தில் 'நான் அந்த மருத்துவரை சந்தித்தேன்' என்று குறிப்பிட்ட மருத்துவரை குறிக்கிறது.
a மற்றும் an  உபயோகம்.
a என்ற எழுத்து மெய்யெழுத்துக்களின் முன்னால் வருகிறது.
  (e.x)           a dog, a cat, a monkey, a man,
an  என்பது உயிரெழுத்துக்களின் முன்னால் வருகிறது.
(e.x)   an apple, an animal, an ox, an oven,
குறிப்பு: a என்பது தமிழில் (ஒரு) என்ற அர்த்தம் தொனிக்க வருகிறது.
அதே நேரம் an என்பது (ஓர்) என்று அர்த்தமாகிறது.
தமிழில் உயிரெழுத்திற்கு முன் ஓர் என்று தான் எழுதவேண்டும். ஒரு என்பது தவறாகும். உதாரணத்திற்கு, ஓர் இரவு, ஓர் இலை, ஓர் ஆணி

இதை கவனியுங்கள்:
 /   He is an M.L.A   /  இவ்வாக்கியத்தில் M  என்பது மெய்யெழுத்து ஆனால் an என்ற
 வார்த்தை பயன்படுத்தபடுகிறது. இது சரியா?.
ஆம் சரிதான். ஏனென்றால் நான் முன்பே சொன்னது போல ஆங்கிலம் உச்சரிப்பு
சார்ந்த மொழி. இப்போது மேற்கண்ட வாக்கியத்தை உச்சரியுங்கள்.
He is an M.L.A - அவர் ஓர் ம்.எல்.ஏ
 எ என்பது உயிரெழுத்து என நாம் அறிந்ததே. அதைபோல்
a one rupee coin. =     இதன் உச்சரிப்பு அ வொன் ருப்பி காயின்
a useful article     =    இதன் உச்சரிப்பு யூஸ்புல் ஆர்டிகல்
a  university       =     இதன் உச்சரிப்பு யூனிவர்சிட்டி
உயிரெழுத்தாக இருப்பினும் உச்சரிப்பு மெய்யெழுத்தின் ஓசையை கொண்டிருப்பதால் a  பயன்படுத்துகிறோம்.
The  உபயோகம் :
இதன் உபயோகம் பலவகையாகின்றன.
A. ஒருமை சொல்லை பொதுவாக பயன்படுத்தும் போது:
The cow is useful animal.
பசு ஒரு உபயோகமுள்ள விலங்கு.
The Rose is sweetest of all flowers
ரோஜா அனைத்து மலரினும் சிறந்தது.(கவித, கவித).
B. குறிப்பிட்டு ஒரு பொருளையோ,நபரையோ சுட்டும்பொழுது,
I dislike the fellow.
எனக்கு அந்த நபரை பிடிக்காது.
   Let's go to the club.
அந்த  விடுதிக்கு செல்லலாம்.
C. ஆறுகள்,மலைகள்,கடல்கள் ஆகியவற்றின் பெயர்களுக்கு முன்னால் .
       The Himalayas.
       The Red sea.
        The British Isles.
D. ஒரு குறிப்பிட்ட புத்தகங்களை குறிக்கும்போது
 The Bible.
The vedha,
The Quran
மேலும் பல இடங்களில் பயன்படுகிறது.

Post a Comment