sub chapter 4: usage of do, does
Sunday, January 17, 2010 by educations in Labels: , , , , , , , ,

இந்த பதிவில் do, does  ஆகியவைகளின் உபயோகங்களை காண்போம்.
எந்த மொழியின் இலக்கணத்திலும் first person, second person, third person என்ற பிரிவு உள்ளதை காணலாம். சரி இந்த first, second இவைகளெல்லாம் என்ன?

நானும் குமாரும் பேசிகொண்டிருக்கிறோம்.அப்போது அவனுடைய தங்கை ஒரு நாய்க்குட்டியோடு அங்கு வருகிறாள். அப்பா அவனை அழைப்பதாக சொல்கிறாள்.பின் குமார் 
அவனுடைய தங்கையோடு வீட்டிற்கு செல்கிறான்.
 இப்போது இந்த சம்பவத்தை என்னுடைய பார்வையில் சொல்கிறேன்.
நான்                                     =         நான் 
குமார்                                  =        அவன்
நானும் குமாரும்             =        நாங்கள், நாம்
 குமாரின் தங்கை             =     அவள்
நாய்க்குட்டி                         = அது
குமாரும் தங்கையும்      =  அவர்கள்

நான் என்பது                                            first person sigular
நாம் என்பது                                           first person plural
நீ       என்பது                                            second person singular
நீங்கள் என்பது                                      second person plural
அவன்&  அவள் &அது என்பது           third person singular
அவர்கள் என்பது                                  third person plural
     ஒரு மொழியை பேசுவதற்கு நாம் அந்த மொழியில் கேள்வி கேட்க வேண்டும்.
உரையாடல் என்பது கேள்வியும் அதற்கு பதிலும் கொண்டதே. நாம் இப்போது do,does
ஆகிய auxilliary யை கொண்டு கேள்வியமைப்பதை காண்போம்.
auxilliary என்றால் என்ன?
துணை வினை சொல் ஆகும்.  அதாவது இந்த வகை சொற்கள் ஆங்கிலவாக்கியங்களில் துணையாக பயன்படுகிறது.மேலும் சில சொற்களை வரும் பதிவில் காண்போம்.
காலங்கள் பொதுவாக மூன்று பிரிவுகளாகவும்(இறந்த,நிகழ்,எதிர்காலங்கள்)
உட்பிரிவில் பனிரெண்டாகவும் வகைப்படுத்தபடுகிறது.அதை பிறகு விரிவாக காண்போம்.
சாதாரண நிகழ்காலத்தில் கேள்விவாக்கியங்களையும், எதிர்மறை வாக்கியங்களையும்  அமைக்க do , does  பயன்படுகிறது.
1. I walk.
நான் நடக்கிறேன்
do I walk?
நான் நடக்கிறேனா?
I do not walk.                                  
2. You walk.                        
நீ நடக்கிறாய்.

DO you walk?
நீ நடக்கிறாயா?

You do not walk.
நீ நடக்கிறாயா?
you do not walk.

நீ நடப்பதில்லை

3. They walk.
அவர்கள் நடக்கிறார்கள்
Do they walk?
அவர்கள் நடக்கிறார்களா?
They do not walk.
அவர்கள் நடப்பதில்லை .
4.we walk.
நாம் நடக்கிறோம்.
do we walk?
நாம் நடக்கிறோமா?
we do not walk.
நாம் நடப்பதில்லை.
5.They walk.
அவர்கள் நடக்கிறார்கள்.

Do they walk?
அவர்கள் நடக்கிறார்களா?

they do not walk.
அவர்கள் நடப்பதில்லை


----------------------------------------------
6.He walks.
 அவன் நடக்கிறான்.
Does he walk?
அவன் நடக்கிறானா?

He does not walk.
அவன் நடக்கவில்லை.

7.She walks.
அவள் நடக்கிறாள்

Does she walk?
அவள் நடக்கிறாளா?

She does not walk.
அவள் நடக்கவில்லை.

8. It walks.
அது நடக்கிறது.

Does it walk?
அது நடக்கிறதா?

It does not walk.
அது நடக்கவில்லை.


மேற்கண்ட வாக்கியங்களை படிக்கும்போது இயல்பாக ஒரு சந்தேகம் வரக்கூடும்.
அதாவது I,you, you,we,they க்கு do வந்தது. He,she, it க்கு மாறுபடுகிறது. அதுதான் ஆங்கிலம்.இலக்கண விதிப்படி He,she,it க்கு செய்தி வாக்கியத்தில் s  சேர்க்க வேண்டும். கேள்வி மற்றும் எதிர்மறை வாக்கியத்தில் does  சேர்க்கப்படுகிறது.

குறிப்பு:  அதாவது, கிறான்,கிறாள்,கிறது என்று முடியும் வார்த்தைகளுக்கு வினையோடு s சேர்க்க வேண்டும்.  do+ s=  does.
படியுங்கள், உங்கள் கருத்தை சொல்லுங்கள்.தவறு இருந்தால் தெரியப்படுத்தவும்.நன்றி.

Post a Comment