sub chapter 1.phonetics(ஒலியியல்)
Friday, December 25, 2009 by educations in

குறிப்பு: phonetic sympol (ஒலியியல் குறியீடு) ஐ பதிவு செய்யும் தொழில் நுட்பம் தெரியாததால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்.
நாம் ஏன் ஆங்கிலத்தை பேசுவதற்கு சிரமமாக உணர்கிறோம் என பார்க்கும் போது நம் ஏனைய இந்திய மொழிகள் போல் அல்லாமல் ஆங்கிலம் ஒரு தனித்த மரபை கொண்டிருக்கிறது.
அதாவது ஒரு இடத்தில் ஒரு விதி பின்பற்றப்படுகிறது. வேறொரு இடத்தில் வேறு விதி அமைகிறது. உதாரணத்திற்கு :
hollow -இதை ஹாலோ என்றும் hour -இதை அவர் அதாவது h -ஐ மௌனபடுத்தி உச்சரிக்கிறோம்.

இதுதான் முறையும் கூட.

தமிழில் அம்மா என்பதை அ-ம்- மா. என்று ஒவ்வொரு எழுத்தாக சேர்த்து வாக்கியம் அமைப்பது குறைவான வேலையை கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் mother என்பதை m-o-t-h-e-r. என்று இருக்கிற 26 எழுத்திலேயே சமாளிக்க வேண்டிஇருப்பதால் சில மரபுகள், இலக்கணங்கள், உச்சரிப்பு முறை ஆகியவற்றை தெரிய வேண்டியது முறையாகிறது.

ஆங்கிலம் என்பது உச்சரிப்பு சார்ந்த மொழி;
அதனாலே நம்மால் அமெரிக்க, ஆங்கிலேயர்களின் ஆங்கில உச்சரிப்பை புரிந்து கொள்ள சிரமப்படுகிறோம். நாம் ஆங்கிலத்தில் உச்சரிக்கும் முறையான phonetic -ஐ புரிந்து கொண்டால் அதை மீண்டும் மீண்டும் உச்சரித்து பழகினால் எளிதில் நமக்கும் english accent வசப்படும்.

ஆங்கிலத்தில் எழுத்து வடிவம் 26 அதில் a,i,o,u,e ஆகியவை உயிரெழுத்துகளாகவும் மீதம் மெய்எழுத்துக்களாகவும் உள்ளது.

ஆயினும் உச்சரிப்பு வகை மொத்தம் 44 வகைபடுகிறது.
---------------------------------------------------------------------------------
vowels/12 வகை உச்சரிப்பை உள்ளடக்குகிறது
அவை; அ, ஆ, இ, ஈ,உ,ஊ,எ,ஏ,அஎ, ஒ, ஆஒ, அ
இதில் முதல் அ விற்கும் கடைசி அ விற்கும் சிறிது வேறுபாடு உண்டு.
-----------------------------------------------------------------------------------
diphthongs/8 (இரட்டைஎழுத்து)
எய்,அய், ஒய், அஒவ்,அஓ,இய,எஅ,உஅ
-------------------------------------------------------------------------------------
consonants/44 வகைபடுகிறது

(b)இப்
 ts (ச்),
(d )ட,
இப்(f ),
இக்(g ),
ஹ(h ),
dz (ஜ்),
ய்(i ),
க்(k )
ல்(l ),
ம்(m ),
ந்(n ),
ங்(ng )
ப்(p )
ர்(r )
ஸ்(s)
ஷ்(sh)
ட்(t )
த்(d ) மென்மையான அழுத்தம்
த்(th )
வ்(v )
வ்வ்(w )
ஜ்ழ்(?)
ஜ(z )
மேற்சொன்னவற்றின் சரியான ஒலியியல் குறியீடை என்னால் பதிவு செய்ய முடியவில்லை.   மன்னிக்கவும்.

உயிரெழுத்தின் பேச்சொலிகள்:
ஒலியியலை பொறுத்தவரை உயிரெழுத்துகள் என்பது அடி தொண்டையிலிருந்து எவ்வித தடையும் இன்றி இயல்பாக ஒலிக்கக்கூடிய ஒலிகள் உயிரெழுத்துகள் எனப்படுகிறது.

அவை இரு வகைகளாகிறது.
1.short vowels (குறுகி ஒலிக்கும் உயிரெழுத்து)
அ, இ,உ,எ,அஎ, ஒ,
2.long vowels(நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்து )
 ஆ, ஈ,ஊ,ஏ,ஆஒ,
----------------------------------------
examples of short vowels:
ஆங்கிலம் என்பது எழுத்தை கொண்டு அல்ல உச்சரிப்பை கொண்டு அமைகிறது.

உதாரணமாக அ -வின் உச்சரிப்பு :

oven-tongue இதை உச்சரிக்கும்போது /அவன்/ டங்/என உச்சரிக்கவேண்டும்.

அதை போன்று :                              
வார்த்தைகள்                                                 உச்சரிக்கும் முறை
-----------------------------------------------------------------------------------------------
blood-flood                                                      ப்ளட்/ ப்ளட்
 
but -cut                                                           பட்/கட்
does-does'nt                                                    டஸ்/டஸ்ன்ட்
tough-trouble                                                   டப்/ட்ரப்ல்
double-enough                                                 டபுள்/ இனப்
-------------------------------------------------------------------------------------
இ-யின் உச்சரிப்பு

village -surface                                                விலிஜ்/சர்பிஸ்
coffee-toffee                                                   காபி/டாபி
                 ------------------- %%%%%%%%----------------""""
குறிப்பு; மேற்சொன்ன விளக்கங்கள் புரியவில்லையெனில் கவலை வேண்டாம்.
இது குறித்து நாம் இன்னும் விரிவாக பின்வரும் பாடங்களில் காணலாம்.

Post a Comment