chapter.6 :The adjective
Wednesday, December 30, 2009 by educations in

adjective - என்பது ஒரு நபரின்/பொருளின் தன்மையை குறிக்கும் சொல்லாகிறது.

  1. Kumar is a clever boy .
குமார் ஒரு சூட்டிகையான பையன்
.
 \இதில் குமார் என்ற பையனின் குணத்தை குறிக்கும் clever  என்ற சொல் adjective
ஆகிறது.
2 . I don't like that colour
எனக்கு அந்த கலர் பிடிக்காது.
இந்த வாக்கியத்தில் that (அந்த) என்பது adjective
3 . He gave me five rupees
அவன் எனக்கு ஐந்து ரூபாய் கொடுத்தான்.
இதில் five என்பது adjective ஆகிறது.
4 . there is little time to do the work .
இந்த வேலை செய்ய நேரமில்லை .
5.The lazy boy was punished.
சோம்பேறி பையன் தண்டிக்கப்பட்டான்
.6 .I am quite well.
நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்.
7.I have called several times.
நான் பலமுறை கூப்பிட்டேன்
 8.What time is it?
நேரம் என்ன?
9.which pen do you prefer?
எந்த பேனாவை விரும்புகிறாய்.
10 .He comes here every day.
அவன் இங்கு தினமும் வருகிறான்.
மேலுள்ளவற்றில் சிவப்பு நிறமிட்ட அனைத்தும் adjective எனப்படுகிறது.

விளக்கம்:  . பெயர்ச்சொல்லை  குறித்து வரும் எந்த ஒரு சொல்லும் adjective ஆகும்.
அவன் ஒரு பையன் என்ற வாக்கியத்தில் adjective சேர்க்க விரும்பினால்
 அவனை நல்லவனாகவோ /கெட்டவனாகவோ ,சிறியவனாகவோ/பெரியவனாகவோ
ஆக்கலாம்.  உதாரணத்திற்கு அவன் ஒரு நல்ல பையன் .He is a good boy.

Post a Comment